< Back
சினிமா செய்திகள்
நயன்தாராவின் டியர் ஸ்டூடண்ட்ஸ் - பூஜையுடன் தொடக்கம்
சினிமா செய்திகள்

நயன்தாராவின் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' - பூஜையுடன் தொடக்கம்

தினத்தந்தி
|
8 May 2024 12:37 AM IST

இரண்டாவது முறையாக நிவின் பாலியுடன் நயன்தாரா இணைந்துள்ளார்.

சென்னை,

பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.1,100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு 'லவ் ஆக்சன் டிராமா' என்ற திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக நிவின் பாலியுடன் நயன்தாரா இணைந்துள்ளார். இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்திற்கு 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஆசிரியராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது குறித்து நயந்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்