< Back
சினிமா செய்திகள்
நயன்தாரா நடிக்கும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியீடு
சினிமா செய்திகள்

நயன்தாரா நடிக்கும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியீடு

தினத்தந்தி
|
18 Nov 2022 7:25 PM IST

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

நயன்தாராவின் 81-வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்