< Back
சினிமா செய்திகள்
நயன்தாரா நடிக்கும் 75-வது படம் அன்னபூரணி - அறிவிப்பு வெளியீடு
சினிமா செய்திகள்

நயன்தாரா நடிக்கும் 75-வது படம் 'அன்னபூரணி' - அறிவிப்பு வெளியீடு

தினத்தந்தி
|
24 Oct 2023 6:45 PM GMT

நயன்தாரா நடிக்கும் 75-வது படத்திற்கு 'அன்னபூரணி' என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் முதல் முறையாக இந்தியில் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த 'ஜவான்' திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 75-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு 'அன்னபூரணி' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ், டிரைடெண்ட் ஆர்ட்ஸ், நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.


மேலும் செய்திகள்