< Back
சினிமா செய்திகள்
சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருது வென்ற நயன்தாரா
சினிமா செய்திகள்

சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருது வென்ற நயன்தாரா

தினத்தந்தி
|
21 Feb 2024 5:00 AM IST

அட்லீ முதன்முறையாக பாலிவுட்டில் நுழைந்து, ஷாருக்கானை இயக்கிய இந்த படத்தில் தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

புனே,

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோன்று சிறந்த நடிகைக்கான விருது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

இதனை நடிகர் ஷாருக்கான் அவருக்கு வழங்கினார். இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் ஆக்சன், திரில்லிங் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவான் படத்தில், இரட்டை வேடமேற்று ஷாருக்கான் நடித்துள்ளார். படத்தில், காவலராக நடித்த நயன்தாரா, ஷாருக்கானின் அன்பு காதலியாகவும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி படம் திரைக்கு வந்தது. ரூ.1,000 கோடி வரை வசூல் செய்து, படம் சாதனை படைத்தது. முதன்முறையாக அட்லீ பாலிவுட்டில் நுழைந்து, ஷாருக்கானை இயக்கிய இந்த படத்தில் தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

விருது பெற்ற பின்னர் நடிகர் ஷாருக்கான் பேசும்போது, நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான்.

அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு என கூறினார். விழாவில், ஜவான் படக்குழுவினர் அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் அவர் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் செய்திகள்