< Back
சினிமா செய்திகள்
திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா
சினிமா செய்திகள்

திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா

தினத்தந்தி
|
8 Oct 2022 8:10 AM IST

மோகன்லால் நடிக்க தமிழ், மலையாளம் மொழிகளில் தயாராகும் ராம் படத்தில் திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் நயன்தாராவும், திரிஷாவும் சினிமாவை தாண்டி நெருங்கிய தோழிகளாகவும் இருக்கிறார்கள். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன், திரிஷாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திரிஷாவுக்கு பதிலாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டனர். தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க தமிழ், மலையாளம் மொழிகளில் தயாராகும் ராம் படத்தில் திரிஷா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது. ராம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவுடன், நயன்தாரா நடிக்கும் காட்சிகள் இடம் பெறும் என்றும் இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகளில் நயன்தாரா வருவது போன்று திரைக்கதை அமைத்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்