< Back
சினிமா செய்திகள்
சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா
சினிமா செய்திகள்

சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

தினத்தந்தி
|
18 Oct 2023 8:16 AM IST

‘சஞ்சய் லீலா பன்சாலி’ படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.13 கோடிக்கு மேல் கேட்பதாகவும், கேட்ட சம்பளத்தை கொடுக்க படக்குழுவினர் தயாராக இருப்பதாகவும் இந்தி பட உலகினர் பேசுகிறார்கள்.

தமிழ் திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் போய் இருக்கிறார். 'ஜவான்' படம் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தி திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. நயன்தாரா நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன.

'ஜவான்' படத்தால் நயன்தாராவுக்கு இந்தி பட உலகில் மவுசு கூடி உள்ளது. முன்னணி இந்தி நடிகர்கள் பலரும் தங்களுக்கு ஜோடியாக்க ஆர்வம் காட்டுகின்றனர். புகழ்பெற்ற இந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி பெரிய பட்ஜெட்டில் எடுக்க உள்ள பைஜூ பாவ்ரா என்ற படத்தில் ரன்பீர் கபூர், அலியாபட் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தில் நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 'ஜவான்' படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் பெற்றதாகவும், 'சஞ்சய் லீலா பன்சாலி' படத்தில் நடிக்க ரூ.13 கோடிக்கு மேல் கேட்பதாகவும், நயன்தாரா கேட்ட சம்பளத்தை கொடுக்க படக்குழுவினர் தயாராக இருப்பதாகவும் இந்தி பட உலகினர் பேசுகிறார்கள்.

மேலும் செய்திகள்