< Back
சினிமா செய்திகள்
நயன்தாராவின் குழந்தைகளை தேடி வந்த புஜ்ஜி பரிசுப்பெட்டி
சினிமா செய்திகள்

நயன்தாராவின் குழந்தைகளை தேடி வந்த புஜ்ஜி பரிசுப்பெட்டி

தினத்தந்தி
|
6 Jun 2024 9:27 PM IST

'கல்கி 2898 ஏ.டி' படத்தின் படக்குழு புரமோசனுக்காக காமிக் புத்தகம், மற்றும் பொம்மைகள் அடங்கிய புஜ்ஜி பரிசுப்பெட்டி திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களின் வீடுகளுக்கு அனுப்பி வருகிறது.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரும் வாகனமுமான "புஜ்ஜி" அறிமுகம் ஆனது.

இந்நிலையில், 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் டிரெய்லர் வரும் 10- ம் தேதி வெளியாக உள்ளது.கல்கி திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் புரமோசனையும் படக்குழு தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, காமிக் புத்தகம், மற்றும் பொம்மைகள் அடங்கிய புஜ்ஜி பரிசுப்பெட்டி திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, மகேஷ்பாபு மகள் சித்தாரா, ராம்சரணின் மகள் கிலின் காரா ஆகியோருக்கு பரிசுப்பெட்டி அனுப்பப்பட்டது. தற்போது நயன்தாராவின் உயிர் மற்றும் உலக் இருவருக்கும் புஜ்ஜி கார் பரிசுப்பெட்டியை கல்கி படக்குழு அனுப்பி வைத்துள்ளது. இதற்கு நயன்தாராவும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்