திருச்செந்தூர் முருகன் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்
|திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் திருச்செந்தூருக்கு வருகை தந்து சுப்பிரமனிய சாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா இன்று தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் பேட்டரி கார் மூலம் கோவில் பிரகாரத்தின் வழியே சென்று மூலவருக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கோவில் உட்பிரகாரங்களில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர். பின்னர் கோவில் சார்பில் அவர்களுக்கு புஷ்பம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக நேற்று கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.