நயன்தாராவுடன் காதல் வளர காரணமே அந்த முன்னணி நடிகர்தானாம்... ஓபனாக சொன்ன விக்னேஷ் சிவன்
|நயன் தாராவுடன் காதல் ஏற்பட மறைமுக காரணமாக இருந்தது நடிகர் தனுஷ்தான் என விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.
'நானும் ரவுடிதான்' படம் மூலமாகதான் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக அறிமுகமானார்கள். நயன் தாராவிடம் கதை சொல்ல போகும் போதுதான், முதன் முதலாக பார்த்ததாகவும் அதன்பிறகே தங்களுக்கு காதல் ஏற்பட்டதாகவும் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.
இதனிடையே, நயன் தாராவுடன் காதல் ஏற்பட மறைமுக காரணமாக இருந்தது நடிகர் தனுஷ்தான் என விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். இதுகுறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, "'நானும் ரெளடிதான்' படக்கதையை விஜய்சேதுபதியிடம் கூறினேன். ஆனால், அவர் கதையில் கன்வின்ஸ் ஆகாததால் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவிடம் கதை சொல்லும்படி என்னை அனுப்பினார். கதை கேட்டதும் நயனுக்கு உடனே பிடித்து விட்டது. நடிக்கவும் ஒப்புக் கொண்டார்.
அவர் சம்மதம் சொன்னதும் விஜய்சேதுபதியும் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த சமயத்தில் நயனுடன் அதிக நேரம் செலவிட முடிந்தது. இருவருக்குள்ளும் புரிதல் உருவானது. பழக ஆரம்பித்த சில மாதங்களிலேயே இந்த உறவு காதல் என்பது எங்களுக்கு புரிந்து விட்டது. அதனால், எங்கள் காதலுக்கு மறைமுகமாக பிள்ளையார் சுழி போட்ட தனுஷ்க்கு நன்றி" என்றார்.