மும்பை விருது விழாவில் கவர்ச்சியில் அசத்திய நயன்தாரா
|நடிகை நயன்தாரா பாலிவுட்டில் நடைபெற்ற விருது விழாவில் ஹாலிவுட் ஹீரோயின் போல் உடையணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
மும்பை,
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. தமிழில் 'ஐயா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
சினிமாவில் சமீபகாலமாக கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி அதிக படங்கள் வருகின்றன. இந்த படங்கள் கதாநாயகர்களுக்கு இணையாக வசூலும் குவிக்கின்றன. இதனால் நடிகைகள் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார்கள். தமிழ், தெலுங்கில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, நீண்டகால காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
திருமணத்துக்கு பின்னர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
நயன்தாரா 'GQ இந்தியா' இதழ் நடத்திய விருது விழாவில் 'மிகவும் செல்வாக்கு மிக்க இளம் இந்தியர்கள் 2024' விருதை வென்றிருக்கிறார். இந்த விருது விழாவில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்று, பாலிவுட் ரசிகர்களை வாய் பிளக்க செய்திருக்கிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்குகிறார்கள் ஹீரோயின்கள். அப்படி, விருது விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடை நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ஆடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஹாலிவுட் ஹீரோயின் போல சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார் நயன்தாரா.
நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, "சமூகத்தில் பெண்கள் மீது உள்ள பல கட்டுப்பாடுகளை உடைத்து வருவது மிகப்பெரிய விஷயம். அதை செய்பவர்கள் தங்களுக்காக செய்கிறார்கள் என்பதையும் தாண்டி குரல் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் சேர்த்தே தான் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.