'டாக்சிக்' படத்தில் நயன்தாரா?- வெளியான தகவல்
|'டாக்சிக்' படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
'கே.ஜி.எப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் யஷ். இவர் தற்போது கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 'டாக்சிக்' படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக கரீனா கபூர் விலகிவிட்டதாகத் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்துள்ளதாகவும் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் நயன்தாரா கையெழுத்திட்டபின், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.