< Back
சினிமா செய்திகள்
Nayanthara to headline Mookuthi Amman 2, see announcement video
சினிமா செய்திகள்

'மூக்குத்தி அம்மன் 2' - மீண்டும் அம்மனாக நயன்தாரா

தினத்தந்தி
|
13 July 2024 12:06 PM IST

'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாரா நடிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது இவர், நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்திலும், யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அம்மனாக நடித்திருந்த படம் 'மூக்குத்தி அம்மன்'.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்திருந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம்தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆர்.ஜே. பாலாஜி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது.

முன்னதாக இந்த 2-ம் பாகத்தில், முதல் பாகத்தில் அம்மனாக நடித்திருந்த நயன்தாரா நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதனை அறிவித்துள்ளது. இதனையடுத்து மீண்டும் நயன்தாரா அம்மனாக நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்