மகன்களுடன் ஆட்டோவில் சென்ற நயன்தாரா - வீடியோ வைரல்
|நடிகை நயன்தாரா தனது மகன்களுடன் ஆட்டோவில் சென்றார்.
சென்னை,
தமிழ் பட உலகில் நயன்தாரா முன்னணி நடிகையாக திகழ்கிறார். 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டும் வருகிறார். சமீபத்தில் 'அன்னபூரணி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் இவருக்கு 75- வது படமாகும். மேலும் தமிழில் 'மண்ணாங்கட்டி' மலையாளத்தில் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.1,100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது.
முன்னதாக, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், தனது மகன்கள் உயிர் மற்றும் உலகம் உடன் ஆட்டோவில் செல்வது இருந்தது. இதனை கண்ட ரசிகர்கள் தங்களது அன்பை பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.