< Back
சினிமா செய்திகள்
வாழ்க்கையில் இன்பம் பொங்க வாழ்த்துகள் சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து
சினிமா செய்திகள்

"வாழ்க்கையில் இன்பம் பொங்க வாழ்த்துகள்" சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து

தினத்தந்தி
|
29 March 2024 2:08 PM IST

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

இயக்குநர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக சித்தார்த் அறிமுகமானார்.தொடர்ந்து பாய்ஸ், நூற்றெண்பது, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களின் மூலம் முக்கிய நடிகராக வலம் வந்தார் சித்தார்த். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "வாழ்க்கை முழுவதும் இன்பம் பொங்க வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தனர். அதை காட்டும்வகையில் இன்ஸ்டாகிராமில் இணைந்து பல வீடியோகளை பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்