< Back
சினிமா செய்திகள்
Nayanthara shares first glimpse of her next film with Kavin
சினிமா செய்திகள்

கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தினத்தந்தி
|
23 July 2024 2:45 PM IST

நயன்தாரா தனது அடுத்த படத்தில் கவினுடன் நடிக்கிறார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தவர் கவின். தற்போது இவர் , லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

முன்னதாக இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் கவின் ஆகிய இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்துடன் 'ஹாய்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால், இதுவரை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நயன்தாரா தற்போது நிவின் பாலியுடன் 'டியர் பிரெண்ட்ஸ்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். மேலும் கவின், நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படத்திலும், வெற்றிமாறன் தயாரிப்பில் 'மாஸ்க்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்