50 வினாடி விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா
|நயன்தாரா 50 வினாடிகள் ஓடும் விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா அதிகம் சம்பாதிக்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து செல்வ செழிப்போடு வாழ்கிறார். ஒரு படத்தில் நடிக்க கதை, கதாபாத்திரங்களை பொறுத்து ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
ஷாருக்கானுடன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஜவான் படத்தில் நடிக்க ரூ.10 கோடி பெற்றதாக தகவல். தயாரிப்பாளர்களும் நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முன் வருகிறார்கள். நயன்தாராவின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படங்களில் மட்டுமன்றி சமீப காலமாக அதிகமான விளம்பர படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். 50 வினாடிகள் ஓடும் விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இன்னொரு புறம் நிறைய தொழில்களில் முதலீடும் செய்து இருக்கிறார். அதன் மூலமாகவும் கோடி கோடியாய் பணம் வருகிறது. சென்னையில் சொகுசு வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டில் பிரத்யேகமான திரையரங்கு, நீச்சல் குளம், ஜிம் போன்ற வசதிகள் உள்ளன. வெளி மாநிலங்களிலும் அதிக சொத்துகள் வைத்துள்ளார்.