< Back
சினிமா செய்திகள்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 பிரபலங்களை பின்தொடரும் நயன்தாரா
சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 பிரபலங்களை பின்தொடரும் நயன்தாரா

தினத்தந்தி
|
5 Sept 2023 12:42 PM IST

நடிகர்-நடிகைகள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு வைத்து தங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். சினிமா மற்றும் பொது விஷயங்கள் சம்பந்தமான கருத்துக்களையும் பதிவிடுகிறார்கள்.

இந்த நிலையில் இதுவரையில் ஒதுங்கி இருந்த நடிகை நயன்தாராவும் சில தினங்களுக்கு முன்பு தனது இரட்டை குழந்தைகளின் முகங்களை காட்டும் வீடியோவுடன் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். ஷாருக்கானுடன் நடித்துள்ள 'ஜவான்' பட டிரெய்லரையும் பகிர்ந்தார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் நயன்தாராவை பின் தொடர்கிறார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் 20 நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, சமந்தா, அபர்ணா பாலமுரளி, கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, அலியா பட், பார்வதி, நிஹாரிகா, ஒபாமாவின் மனைவி மிச்செல், இந்தி நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், விக்னேஷ் சிவன், ஜெனிபர் லோபஸ் உள்ளிட்ட 20 பிரபலங்களை மட்டும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்.

மேலும் செய்திகள்