< Back
சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவனுடன் பிரிவு? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா
சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவனுடன் பிரிவு? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

தினத்தந்தி
|
8 March 2024 11:29 AM IST

நடிகை நயந்தாரா தனது கணவன் விக்னேஷ் சிவனை விட்டு பிரிய உள்ளதாக தகவல்கள் பரவின.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சமீபகாலமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. அந்த வகையில் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் விக்னேஷ் சிவனின் கணக்கு அன்-பாலோ செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் காதல் கொஞ்சும் படங்களை சமீபத்தில் விக்னேஷ் சிவன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதேவேளை, நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ம்ம்ம்... ஐயம் லாஸ்ட் (நான் இழந்துவிட்டேன்) என்ற வார்த்தைகளை பதிவிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது. ஏற்கனவே நயன்தாரா குடும்ப விவகாரத்தில் பல்வேறு வதந்திகள் வெளியாகும் நிலையில், அவரது இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பும்படி அமைந்திருந்தது. இது நயன்தாராவின் குடும்ப சர்ச்சை குறித்த பதிவா? அல்லது புதிய படம் குறித்த பதிவா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும், விக்னேஷ் சிவனை விட்டு நயன்தாரா பிரிகிறாரா? என்ற கேள்விகளும் எழும்பின.

இந்நிலையில், பிரிவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் புகைப்படத்தை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் பயணிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நயன்தாரா, விக்னேஷ்சிவன் நீண்டநாட்களுக்கு பின் என் மகன்களுடன் பயணிக்கிறார்' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்