குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா... இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்...!
|நடிகை நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.
டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்து வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், 'நான் இதற்குமேல் அதிகமாக கேட்கமுடியாது. கடவுள் எனது வாழ்க்கையில் இந்த 3 ஆண்களை பரிசளித்திருக்கிறார். ஐ லவ் யு விக்கி, என் உயிர் மற்றும் உலக்' என பதிவிட்டுள்ளார்.
மேலும், நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் பரிசு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுகுறித்த விடியோவை பகிர்ந்துள்ள நயன்தாரா, 'நீங்கள் எனக்காக இதுபோன்ற ஒன்றை செய்வீர்கள் என்னால் நம்ப முடியவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.