< Back
சினிமா செய்திகள்
குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்
சினிமா செய்திகள்

குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தினத்தந்தி
|
10 Jun 2024 8:56 PM IST

இரண்டாவது திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.

இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.


விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இரண்டாவது திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா. அதிலும் விக்னேஷ்சிவனை தூக்கச் சொல்லி இவர் செய்த குறும்பு வீடியோவும் இணையத்தில் வைரலானது.

'உன்னைத் திருமணம் செய்தது என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயம். நம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதில் கடவுள் நம்முடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்