மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. வைரலாகும் வீடியோ
|நடிகை நயன்தாரா தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களைப் ஒரு வீடியோவாக தயார் செய்து பகிர்ந்துள்ளார்.
சென்னை,
இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது எக்ஸ் பக்கத்திலும் தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களைப் ஒரு வீடியோவாக தயார் செய்து பகிர்ந்துள்ளார்.