< Back
சினிமா செய்திகள்
முதல் தடவையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் நயன்தாரா?
சினிமா செய்திகள்

முதல் தடவையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் நயன்தாரா?

தினத்தந்தி
|
20 April 2023 7:22 AM IST

கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்து இருக்கிறார். இந்தியில் ஷாருக்கான் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

இதுவரை கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கவில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தால் முதல் தடவையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ஏற்படும். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. அதன் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் பட வேலைகளை மணிரத்னம் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்