வைரலாகும் நயன்தாரா தேனிலவு படங்கள்
|நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதல் திருமணம் செய்து கொண்ட கையோடு தேனிலவுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர்.
பாங்காக்கில் உள்ள சொகுசு ஓட்டலில் இருவரும் தங்கி இருக்கிறார்கள். ஓட்டல் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வலைத்தளத்தில் வெளியிட்டார். தற்போது தாய்லாந்தில் தாரத்துடன் ஹனிமூன் என்ற தலைப்பில் மேலும் சில புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் கணவன், மனைவியாக காதலில் திளைக்கும் காட்சிகள் உள்ளன. இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தேனிலவு முடிந்து திரும்பியதும் நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாரா புதிய படங்களில் நடிக்க நிபந்தனைகள் விதித்துள்ளார். கதாநாயகனுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன். கவர்ச்சி உடைகள் அணிய மாட்டேன். நாயகன் என்னை தொட்டு நடிக்க கூடாது, முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன்என்றெல்லாம் இயக்குனர்களிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.