5 மொழிகளில் நயன்தாரா படம்
|நயன்தாரா படம் முதல் தடவையாக 5 மொழிகளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் அண்ணாத்த, நெற்றிக்கண் படங்கள் வந்தன. விஜய்சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது அட்லி இயக்கும் ஜவான் படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஷாருக்கான் மகன் ஆர்யன்கான போதை பொருள் வழக்கில் சிக்கியதால் இதன் படப்பிடிப்பு முடங்கியது.
ஷாருக்கான் பதான் படத்தில் நடிக்க சென்று விட்டார். ஜவான் படம் கைவிடப்பட்டு விட்டதாக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. படத்தில் ஷாருக்கான் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். அடுத்த வருடம் ஜூன் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். நயன்தாரா படம் முதல் தடவையாக 5 மொழிகளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.