< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருநங்கையாக நவாசுதீன் சித்திக்
|16 Aug 2023 4:51 PM IST
நவாசுதீன் சித்திக் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இந்தி திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். விருதுகளும் பெற்றுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
சமீபத்தில் நவாசுதீன் சித்திக்குக்கும் பிரிந்து போன அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு போலீஸ், கோர்ட்டு வரை சென்று பரபரப்பானது.
நவாசுதீன் சித்திக் தற்போது இந்தியில் உருவாகி வரும் ஹத்தி என்ற படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவரது தோற்றம் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரத்தம் படிந்த கத்தியுடன் உட்கார்ந்து இருக்கிறார். படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சரத்குமார், விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.