விஜய் அரசியலுக்கு வருவது சந்தோஷம்தான் ஆனால்... - நடிகர் கார்த்திக்
|விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் 80, 90-களில் முன்னணி நடிகராக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் தற்போது விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கு சந்தோஷம்.
மக்களும் அவரின் இந்த முடிவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். நடிப்பதைவிட்டுவிட்டு முழுமையாக அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவை சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அவர் எடுத்துள்ளார். எனது விருப்பம் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் .
ஏனென்றால், படத்தில் நடிப்பதுமூலம் அவர் தனது கோரிக்கைகளையும் யோசனைகளையும் மக்களுக்கு எளிதாக தெரிவிக்கலாம். என்றார்.
நடிகர் விஜய், தளபதி 69 படத்திற்கு பிறகு முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், நமது இலக்கு 2026 தேர்தல் என்றும் கூறினார். தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மாஸ்கோவில் நடந்துவருகிறது.