< Back
சினிமா செய்திகள்
இந்தியன்-2 படத்தில் கமலுடன் நடிக்கும் கார்த்திக்
சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தில் கமலுடன் நடிக்கும் கார்த்திக்

தினத்தந்தி
|
9 Aug 2022 3:38 PM IST

இந்தியன்-2 படத்தில் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கிரேன் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. பின்னர் கமல்ஹாசன் வேறு படத்தில் நடிக்க சென்றதாலும், ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்க போய்விட்டதாலும் இந்தியன்-2 படப்பிடிப்பு முடங்கியது. இந்த பிரச்சினை கோர்ட்டுக்கும் சென்றது. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியான தகவலை மறுத்த கமல்ஹாசன், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்தார். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியன்-2 படத்தில் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக் தற்போது கமலுடன் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்த்திக் சமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்