< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நட்டி நடராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!
|20 Jun 2022 10:13 PM IST
நடிகர் நட்டி நடராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.
சென்னை,
ஒளிப்பதிவாளராக இருந்து நடிகரான நட்டி நடராஜ், இயக்குனர் அந்தோணி சாமி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கூராய்வு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜை விழாவில் நடிகரும் இயக்குனருமான பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த படத்தில் சுபாபிரியா மலர், மனோபாலா, போஸ் வெங்கட், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து முனியசாமி படத்தொகுப்பு செய்துள்ளார்.
நட்டி நடராஜ் கடந்த ஆண்டு வெளியான 'கர்ணன்' படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது 'இன்பினிட்டி', 'பகாசூரன்', 'யுகி', உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.