தேசிய திரைப்பட விருது: சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்; சிறந்த நடிகைகள் அலியா பட், கீர்த்தி சனோன்
|சிறந்த நடிகைக்கான விருதை முறையே 'கங்குபாய் கத்தியவாடி' மற்றும் 'மிமி' படத்திற்காக ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டனர்.
புதுடெல்லி,
69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மத்திய மந்திரி அனுராக் தாகூர் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரத்தை அறிவித்தார். தாதாசாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்படாது. அது பின்னர் அறிவிக்கப்படும்.
திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
சிறந்த நடிகைக்கான விருதை முறையே 'கங்குபாய் கத்தியவாடி' மற்றும் 'மிமி' படத்திற்காக ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டனர்.
'புஷ்பா: தி ரைஸ்' படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
பி.லெனின் இயக்கிய 'சிற்பிகளின் சிற்பங்கள்' சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'கொமுரம் பீமுடோ' பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கால பைரவா வென்றார்
தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை காஷ்மீர் பைல்ஸ் வென்றுள்ளது.
'ஷெர்ஷா' திரைப்படம் சிறப்பு ஜூரி விருதை வென்றது.
மணிகண்டன் இயக்கிய 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த தமிழ்படம் - 'கடைசி விவசாயி' (மணிகண்டன்)