< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

சூரரைப்போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 10 விருதுகள் குவித்த தமிழ் சினிமா...!

தினத்தந்தி
|
22 July 2022 4:26 PM IST

சூரரைப்போற்று- 5 மண்டேலா-2 சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்- 3 என மொத்தம் 10 விருதுகள் குவித்த தமிழ் சினிமா

புதுடெல்லி

சூரைப் போற்று படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது , சிறந்த நடிகைக்காக தேசிய விருது அபர்ணா பால முரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு சிறந்த பின்னணி இசைக்கான விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படம் ஆகியப் பிரிவுகளிலும் சூரரைப் போற்று திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த எடிட்டிங்கிற்கான விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்திற்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த வசனத்திற்கான தேசிய விருது மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சிறந்த நடிகர்- சூரரைப் போற்று (தமிழ்); நடிகர்: சூர்யா தன்ஹாஜி :தி அன்சாங் வாரியர் (இந்தி); நடிகர்: அஜய் தேவ்கான்

சிறந்த நடிகை: சூரரைப் போற்று (தமிழ்); நடிகை: அபர்ணா பாலமுரளி

சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (தமிழ்) கதை வசன எழுத்தாளர்: ஷாலினி உஷா நாயர் & சுதாகொங்கரா ;

மண்டேலா (தமிழ்); வசனகர்த்தா: மடோன் அஷ்வின்

சிறந்த துணை நடிகை சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (தமிழ்); நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலி

சிறந்த இயக்குநர்; ஆர்.வி. ரமணி (ஓ தட்ஸ் பானு - ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி படம்)

சிறந்த தெலுங்கு படம்: கலர் போட்டோ

சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த மலையாள படம்: திங்கலாச்ச நிச்சயம்

சிறந்த மராத்தி படம்: கோஸ்தா ஏகா பைதானிச்சி

சிறந்த கன்னட படம்: டோலு

சிறந்த இந்தி படம்: துளசிதாஸ் ஜூனியர்

சிறந்த பெங்காலி படம்: அவிஜாத்ரிக்

சிறந்த அசாமிய திரைப்படம்: பிரிட்ஜ்

சிறந்த சண்டை காட்சிக்கான விருது: .அய்யப்பனும் கோஷியும்

சிறந்த நடன அமைப்பு: நாட்டியம் (தெலுங்கு)

சிறந்த பாடல் வரிகள்: சாய்னா (இந்தி)

சிறந்த இசை -ஆலா வைகுந்தபுரமுலு (தெலுங்கு) இசையமைப்பாளர் (பாடல்கள்): எஸ். தமன்

சூரரைப் போற்று (தமிழ்) - இசையமைப்பாளர் (பின்னணி இசை): ஜிவி பிரகாஷ் குமார்

சிறந்த ஒப்பனை கலைஞர்: டி.வி.ராம்பாபு (நாட்டியம் தெலுங்கு படம்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: நச்சிகேத் பார்வே & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் இந்தி படம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: அனீஸ் நாடோடி (கப்பேலா (சேப்பல்) மலையாள படம்)

சிறந்த படத்தொகுப்பு: எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்றும் சில பெண்களும் - தமிழ் படம்

சிறந்த ஒலிப்பதிவு: ஜோபின் ஜெயன் (டோலு (கன்னடம்); லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் (ஒத்திசைவு ஒலி படங்களுக்கு மட்டும்) அன்மோல் பாவே (மி வசந்தராவ் ஐ ஆம் வசந்தராவ் (மராத்தி படம்)விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ சங்கர் (மாலிக் - மலையாள படம்; இறுதிக்கலவை டிராக்கின் மறுபதிவு)

Live Updates

  • ஐயப்பனும் கோஷியும்’ 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளது
    22 July 2022 5:23 PM IST

    ஐயப்பனும் கோஷியும்’ 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளது

    சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்திற்காக பிஜு மேனன் பெற்றார்.

    மறைந்த இயக்குநர் சச்சிதானந்தத்துக்கு தேசிய விருது அறிவிப்பு!( ஐயப்பனும் கோஷியும்)

    சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்தில் இடம்பெற்ற 'களக்காத்த சந்தனமேரம்' பாடலுக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு கிடைத்து உள்ளது.

    சிறந்த சண்டைபயிற்சிக்கான விருது பெற்றுள்ளது

  • சிறந்த அறிமுக இயக்குநராக மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வின் தேர்வு
    22 July 2022 5:01 PM IST

    சிறந்த அறிமுக இயக்குநராக மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வின் தேர்வு

    * திரைப்படங்கள் தொடர்பான சிறந்த புத்தகமாக அனூப் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்திற்கு தேசிய விருது

    * சிறந்த அறிமுக இயக்குநராக மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வின் தேர்வு , சிறந்த வசனத்திற்காகவும் மண்டேலே தேர்வு செய்யப்பட்டு உள்ளது

    * சிறந்த வர்ணனை விருது ஷோபா தரூர் சீனிவாசன்

    * சிறந்த இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ்

    * சிறந்த ஒளிப்பதிவாளர் ஷப்டிகுன்ன காளப்பா

    * ஓ தட்ஸ் பானு திரைப்படத்திற்காக ஆர்.வி.ரமணி-க்கு சிறந்த இயக்குநர் விருது

    * சிறந்த புலனாய்வுப் பிரிவு படமாக சேவியர் பிரிகேடியர் ப்ரீதம் சிங் தேர்வு, இயக்குநர் பரம்ஜீத் சிங்

    * மலையாள மொழியில் வாங்கூ, மராத்தி மொழியில் அவன்சித் படங்களுக்கு சிறப்பு ஜுரி விருதுகள் அறிவிப்பு

    * சிறந்த தெலுங்கு மொழிப்படமாக கலர் போட்டோ

    * சிறந்த சண்டைக்காட்சிகள் அமைப்பு படமாக மலையாளப் படமான அய்யப்பனும், கோஷியும் தேர்வு

    * சிறந்த இசையமைப்பாளர் அலா வைகுந்தபுரம் படத்திற்காக தமன் தேர்வு

  • 22 July 2022 4:55 PM IST

    5 விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று

    சிறந்த படம் சூரரை போற்று

    சிறந்த திரைக்கதை - சூரரை போற்று

    சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று)

    சிறந்த நடிகர் - சூர்யா (சூரரை போற்று)

    சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று)

    சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

  • 22 July 2022 4:44 PM IST

    சிறந்த திரைக்கதை - சூரரை போற்று

    சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று)

  • 22 July 2022 4:39 PM IST

    சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

    கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature):மலையாளம் டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods )

    சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷியாம் (மணிப்புரி)

    சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

    லட்சுமி பிரியா சந்திரமவுலி, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற தமிழ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.

  • 22 July 2022 4:36 PM IST

    கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature):மலையாளம் டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods )

    சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷியாம் (மணிப்புரி)

  • 22 July 2022 4:32 PM IST

    திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறிவிப்பு

  • 22 July 2022 4:29 PM IST

    இந்த ஆண்டு, 30 மொழிகளில் 305 திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறப்பு திரைப்படம் அல்லாத பிரிவில், 28 மொழிகளில் 148 படங்கள் பெறப்பட்டன. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர 15 மொழிகளில் உள்ள திரைப்படங்கள் உள்ளீடுகளாக பெறப்பட்டன. 24 புத்தகங்கள் மற்றும் 5 திரைப்பட விமர்சகர்கள் சினிமா விருதுகளில் சிறந்த எழுத்துக்காக போட்டியிட்டனர்.

    தாதா சாகேப் பால்கே விருது

    திரைப்படப் பகுதி (28 வகைகள்)

    அம்சம் அல்லாத பிரிவு (22 வகைகள்)

    சிறந்த எழுத்துப் பிரிவு (1 வகை)

    உள்பட  5 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது

மேலும் செய்திகள்