< Back
சினிமா செய்திகள்
கருவறை ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிப்பு
சினிமா செய்திகள்

கருவறை ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Aug 2023 5:59 PM IST

'கடைசி விவசாயி' படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இந்த விருதுகளை அறிவித்தார்.

இதன்படி 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த கல்வி திரைப்படமாக 'சிற்பிகளின் சிற்பங்கள்' என்ற ஆவணப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்