< Back
சினிமா செய்திகள்
சினிமா படம் எடுத்து நஷ்டம் அடைந்த நாசர்
சினிமா செய்திகள்

சினிமா படம் எடுத்து நஷ்டம் அடைந்த நாசர்

தினத்தந்தி
|
6 Jun 2022 2:23 PM IST

தமிழில், தெலுங்கில் அதிக படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள நாசர் சினிமா வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ஐதராபாத்தில் நாசர் அளித்துள்ள பேட்டியில் '''நடிப்பு கல்லூரியில் நானும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் ஒன்றாக படித்தோம். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. படிப்பு முடிந்த பிறகு சிரஞ்சீவி பெரிய நடிகர் ஆனார். எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் ஓட்டலில் வேலை பார்த்தேன். பிறகு பாலச்சந்தர் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தேன். சினிமாவை பொறுத்தவரை நானும் கமல்ஹாசனும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டவர்கள். கமல்ஹாசனை ஒரு ஆசிரியராக பார்க்கிறேன். சினிமாவில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து வைத்து இருக்கிறார்.

நான் ஒரு படம் எடுத்து பெரிய நஷ்டம் அடைந்தேன். நஷ்டம் என்றால் பொருள் நஷ்டம் மட்டுமின்றி மன உளைச்சலுக்கும் ஆளானேன். அந்த நேரத்தில் என் மனைவி ஒரு தூணாக நின்று என்னை தாங்கி சமாதானப்படுத்தினார். என் குடும்பத்தினர் அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். பண உதவி என்று நான் யாரையும் கேட்டதில்லை. ஆனால் சினிமா துறையில் எனக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள்'' என்றார்.

மேலும் செய்திகள்