'பிரேமலு' பட நடிகரின் புதிய பட ரிலீஸ் குறித்த அப்டேட்
|இயக்குனர் கிரிஷ் மற்றும் நஸ்லனின் புதிய படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் 'பிரேமலு'. இந்தப்படத்தில் நஸ்லன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 'தண்ணீர்மாதன் தினங்கள்', 'சூப்பர் சரண்யா', 'பிரேமலு' ஆகிய பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, தொடர்ந்து 4-வது முறையாக நஸ்லனுடன் இணைந்துள்ளார் கிரீஷ்.
இதற்கு முன் வெளியான 'பிரேமலு' படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 136 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் மலையாள சினிமாவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து நஸ்லன் மற்றும் இயக்குனர் கிரிஷ் இணைந்து பணியாற்றிய 'ஐ அம் காதலன்' என்ற படம் தயாராகி உள்ளது. இந்தப்படத்திற்கான அப்டேட்டை நஸ்லன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.