ஓட்டல் ரூம் டூ லிப் லாக் முத்தம் வரை...! நரேஷ் -பவித்ரா உறவு குறித்து - மனைவி ரம்யா அதிர்ச்சி தகவல்கள்
|ரம்யா ரகுபதியின் சமீபத்திய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக நரேஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.
பெங்களூரு
பெங்களூரு கன்னட நடிகை கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பவித்ரா லோகேஷ். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமடைந்தார்.
தற்போது இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தனது 16-வது வயதில் திரைஉலகிற்கு வந்த பவித்ரா லோகேஷ் இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது சொந்த ஊர் மைசூரு மாவட்டம் ஆகும். இவர் முதலில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து அவர் கன்னட நடிகர் சுசேந்திர பிரசாத்துடன் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் - மனைவிபோல் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு அவரை விட்டு பிரிந்த பவித்ரா லோகேசுக்கு, பிரபல நடிகர் நரேஷ் பாபுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் - மனைவிபோல் வசித்து வருகிறார்கள்.
நரேஷ் பாபு ஏற்கனவே 3 முறை திருமணம் செய்தவர் ஆவார். அவர் முதன்முதலில் தனது நடன இயக்குனரின் மூத்த மகளை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்த நரேஷ் பாபு, 2-வதாக பிரபல பாடல் ஆசிரியர் தேவுப்பள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி ரேகா சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
பின்னர் அவரையும் விட்டு பிரிந்த நரேஷ் பாபு 3-வதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரம்யா ரகுபதி, நரேஷ் பாபுவைவிட 20 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் நரேசும், பவித்ரா லோகேசும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சமீபத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் ஒரு வீடியோவை வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதுபற்றி அறிந்த நரேசின் 3-வது மனைவி ரம்யா ஆவேசம் அடைந்துள்ளார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில் 'எக்காரணம் கொண்டும் நான் இந்த திருமணத்தை நடத்த விடமாட்டேன். நான் இதுவரை உண்மையாக விவாகரத்து கொடுக்கவில்லை. கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த வேளையில் இதுபோன்ற செயலை இருவரும் கைவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் நரேசை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை' என்று கூறி இருந்தார்
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ரம்யா ரகுபதி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நரேஷ் என்னிடம் வயது குறித்து பொய் சொன்னார். நரேஷ் உண்மையில் என்னை விட 20 வயது மூத்தவர். திருமணத்திற்கு முன் என்னை உடலுறவுக்கு வற்புறுத்தி வந்தார். சில சமயங்களில் திருமணம் வேண்டாம் ஒன்றாக வாழ்வோம் என்று கூறுவார். என்ன சொன்னாலும் கல்யாணத்துக்கும், அவரோட உறவுக்கும் எனக்கு நம்பிக்கை இல்லை. நீ இல்லாமல் நான் இல்லை. உன்னை என் மனைவியாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என எமோஷனல் பிளாக்மெயில் செய்தார். அந்த வார்த்தைகளை நம்பி நரேஷை திருமணம் செய்து கொண்டேன்.
முதலில் நன்றாகத்தான் இருந்தார். பவித்ரா லோகேஷை சந்தித்த பிறகு, எனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். என்னை ஒழித்துக்கட்ட நினைத்துதான். அதற்காக தான் அவர் தகாத உறவுகளை வளர்த்து கொண்டார். வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என கூறினார்
நரேஷ்- ரம்யா ரகுபதிக்கு ஒரு மகன் உள்ளார் பெயர் ரன்வீர். மூத்த காங்கிரஸ் தலைவர் ரகுவீர ரெட்டியின் இளைய மகள் தான் ரம்யா. கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இவரது உறவினர்.
இதற்கு முன் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்து அவர்கள் தங்கி இருந்த அறையை ரம்யா ரகுபதி முற்றுகையிட்டு ரகளை செய்தார்.
அறை கதவை தட்டி கூச்சல் போட்டார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து நரேஷையும், பவித்ராவையும் அறையில் இருந்து வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார்.
போலீசார் குறுக்கிட்டு அடிக்க விடாமல் தடுத்தனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்து கேலி செய்தபடி சென்றார்.
இதுகுறித்து ரம்யா கூறும் போது எனக்கு விவாகரத்து தேவையில்லை. கஷ்டம், சுகங்களை அனுபவித்து வாழ்கிறேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு அப்பா-அம்மா 2 பேருமே வேண்டும். என் குடும்பத்தின் அரசியல் பின்னணியை பார்த்துதான் என்னை நரேஷ் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு அரசியல் ரீதியில் உதவவில்லை என்பதால், எனக்கு இன்று இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பவித்ரா கழுத்தில் போட்டிருந்த வைர நெக்லஸ், என்னுடைய மாமியாருடையது. 2014ல் அவர் இதை வாங்கினார். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், தங்க நகை வாங்குவார். வைர நெக்லசை அவர் அணிந்திருந்தபோது, நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால், இநத் குற்றச்சாட்டை பவித்ரா மறுத்திருந்தார். "நான் ஒரு நடிகை. எனக்கு தேவையான பொருட்களை வாங்கும் சக்தி எனக்கு இருக்கிறது. தங்க நகைகள் மட்டுமின்றி, பிளாட், வீட்டுமனைகள் போன்ற பல சொத்துகளையும் வாங்கியுள்ளேன். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. நான் பெங்களூரில் தான் தங்க நகைகளை வாங்குவேன். எனக்கு யாரும் பரிசளிக்கவில்லை. நடிகர் நரேஷை, நான் நான்காவதாக திருமணமும் செய்யவில்லை; விவாகரத்தும் நடக்கவில்லை. எங்கள் இருவர் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டுமே. ஆனால், அவரது மனைவி ரம்யா, என் மீது வேண்டும் என்றே பழி சுமத்துகிறார். " என்று கூறியிருந்தார்.