விரைவில் 4-வது திருமணம் அம்மா நடிகையை மணக்கும் 60 வயது நடிகர் முத்தமிட்டு உறுதி செய்தார்
|தனது டுவிட்டர் வீடியோவில், நரேஷ் தனது மனைவியாக இருக்கும் பவித்ராவை முத்தமிட்டு தனது ரசிகர்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை
தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும்,தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் பரவியது.
நரேஷும் 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் சமீபத்தில் விவாகரத்து செய்து உள்ளார்.
இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்து அவர்கள் தங்கி இருந்த அறையை ரம்யா ரகுபதி முற்றுகையிட்டு ரகளை செய்தார். அறை கதவை தட்டி கூச்சல் போட்டார்.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து நரேஷையும், பவித்ராவையும் அறையில் இருந்து வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார்.
போலீசார் குறுக்கிட்டு அடிக்க விடாமல் தடுத்தனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்து கேலி செய்தபடி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
பவித்ரா லோகேஷ் சினிமாவில் அம்மா வேடங்களுக்கு புகழ்பெற்றவர். இவர் பல படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் 2018ஆம் ஆண்டு 'சம்மோகனம்' படப்பிடிப்பின் போது சந்தித்தனர். இருவரும் நெருங்கிய உறவை வளர்த்து கொண்டனர். நரேஷ், பவித்ரா லோகேஷ் இருவரும் 'அண்டாரு பாகுந்தலி அந்துல நேனுந்தலி', 'மிடில் கிளாஸ் அப்பா', 'ஹேப்பி வெட்டிங்', 'ராமராவ் ஆன் டூட்டி' உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.
தனது டுவிட்டர் வீடியோவில், நரேஷ் தனது மனைவியாக இருக்கும் பவித்ராவை முத்தமிட்டு தனது ரசிகர்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் வெளியிட்டு உள்ள புத்தாண்டு செய்தியில் "புதிய ஆண்டு. புதிய தொடக்கங்கள். உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும். எங்களிடமிருந்து உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். - பவித்ரா நரேஷ்," என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
நரேஷ் வெளியிட்டுள்ள திருமண அறிவிப்பு வீடியோவை பாருங்கள்: