< Back
சினிமா செய்திகள்
போதை பொருள் ஊக்குவிப்பு காட்சி... டைரக்டருக்கு கலால்துறை நோட்டீஸ்
சினிமா செய்திகள்

போதை பொருள் ஊக்குவிப்பு காட்சி... டைரக்டருக்கு கலால்துறை நோட்டீஸ்

தினத்தந்தி
|
1 Jan 2023 7:10 AM IST

டைரக்டர் ஓமர் லூலு இயக்கிய ‘நல்ல சமயம்’ என்ற மலையாள படத்தின் டிரெய்லரில் போதை பொருளை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக மத்திய கலால்துறை வழக்குப்பதிவு செய்து இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பிரபல மலையாள டைரக்டர் ஓமர் லூலு. இவர் பிரியா வாரியர் நடித்த 'ஒரு அடார் லவ்' படத்தை இயக்கி பிரபலமானார். இந்த படத்தில் பிரியா வாரியர் பாடல் காட்சியில் புருவங்களை அசைத்து கண் சிமிட்டிய புகைப்படங்கள் பிரபலம். 'ஹேப்பி வெட்டிங், தமகா' உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது ஓமர் லூலு இயக்கிய 'நல்ல சமயம்' என்ற மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இதில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் 'நல்ல சமயம்' படத்தின் டிரெய்லரில் போதை பொருளை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாகவும், அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் புகார் கிளம்பி உள்ளது. இதையடுத்து மத்திய கலால்துறை வழக்குப்பதிவு செய்து இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்