'ஜெர்சி' ரீ-ரிலீஸ்: நானி மகன் செய்த செயல் - வீடியோ வைரல்
|நானி தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து 'ஜெர்சி' படத்தை பார்த்துள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நானி. இவர் நடித்த 'நான் ஈ' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் நடித்த ஹாய் நான்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சர்வதேச விருதையும் வென்றது.
கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி வெளியான படம் 'ஜெர்சி'. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது. இதனையடுத்து நானி தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளார். அப்போது தியேட்டரில் அவரது மகன் செய்யும் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வெளியான ஒரு வீடியோவில் ,
அவரது மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. ரசிகர் சூழ்ந்திருந்தபோதிலும் சிரித்துக்கொண்டே உள்ளே செல்கிறான்.
மற்றொரு வீடியோவில், படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியின்போது ரசிகர்களுடன் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நிற்கிறான். அதனை நானி சந்தோஷமாக பார்க்கிறார்.
தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.