ஆஸ்கார் போட்டியில் நானி படம்
|நானி, சாய் பல்லவி நடித்திருந்த ஷியாம் சிங்கா ராய் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழில் 'வெப்பம்' படம் மூலம் அறிமுகமானவர் நானி. தொடர்ந்து 'நான் ஈ', 'நீதானே என் பொன்வசந்தம்', 'ஆஹா கல்யாணம்', 'நிமிர்ந்து நில்' போன்ற படங்களிலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் நானி நடித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் திரைக்கு வந்த ஷியாம் சிங்க ராய் படம் ஆஸ்கார் போட்டிக்கான படங்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளது. சிறந்த படம், பின்னணி இசை, கலாசார நடனம் ஆகிய 3 ஆஸ்கார் விருது போட்டி பிரிவுகளில் இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
ஷியாம் சிங்க ராய் படம் 1970-களில் கொல்கத்தாவில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகி இருந்தது. அதிக பட்ஜெட்டில் உருவாகி நல்ல வசூலும் பார்த்தது. இதில் சாய்பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். ராகுல் சங்கிரித்யன் டைரக்டு செய்து இருந்தார். ஷியாம் சிங்க ராய் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது ஆஸ்காருக்கும் சென்றுள்ளது.