< Back
சினிமா செய்திகள்
சதம் அடித்த நானியின் சூர்யாவின் சனிக்கிழமை
சினிமா செய்திகள்

சதம் அடித்த நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை'

தினத்தந்தி
|
16 Sept 2024 8:17 AM IST

'சூர்யாவின் சனிக்கிழமை' ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

டிவிவி நிறுவனம் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியது. இந்நிலையில், 'சூர்யாவின் சனிக்கிழமை' ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. வசூலில் சதம் அடித்ததையடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து நானி, 'கோர்ட்' மற்றும் 'ஹிட் 3' ஆகிய 2 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் 'ஹிட் 3' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது.

மேலும் செய்திகள்