நடிகர் நானியின் 32-வது பட அப்டேட்
|சினிமாவில் 16 வருடங்கள் நிறைவடைய இருப்பதையொட்டி செப்டம்பர் 5ம் தேதி நானியின் 32வது படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார்.
டிடிவி நிறுவனம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் ஆகஸ்ட் 29 ம் தேதி வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இதுவரை 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நானியின் 32 -வது படத்தின் அறிவிப்பு செப்டம்பர் 5ம் தேதி காலை 11.04 மணிக்கு வெளியாகுமென நானி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நானியின் முதல் திரைப்படம் 'அஷ்ட சம்மா' திரைப்படம் 2008ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. 16 வருட சினிமா பயணம்தெலுங்கு சினிமாவில் 16 வருடங்கள் நிறைவடைய இருப்பதையொட்டி செப்டம்பர் 5ம் தேதி நானியின் 32வது படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.