< Back
சினிமா செய்திகள்
நடிகர் நானியின் 31-வது படத்தின் பெயர் சூர்யாவின் சனிக்கிழமை
சினிமா செய்திகள்

நடிகர் நானியின் 31-வது படத்தின் பெயர் 'சூர்யாவின் சனிக்கிழமை'

தினத்தந்தி
|
23 Oct 2023 2:12 PM IST

நடிகர் நானியின் 31வது படத்திற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நடிகர் நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' பட இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இந்த படத்தை டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். இதனை சமீபத்தில் படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நானியின் 31வது படத்திற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்