< Back
சினிமா செய்திகள்
நானி நடிக்கும் ஹாய் நான்னா படத்தின் நிழலியே பாடல் புரோமோ வெளியீடு
சினிமா செய்திகள்

நானி நடிக்கும் 'ஹாய் நான்னா' படத்தின் 'நிழலியே' பாடல் புரோமோ வெளியீடு

தினத்தந்தி
|
15 Sept 2023 8:05 PM IST

நானி நடிக்கும் 'ஹாய் நான்னா' படத்தின் 'நிழலியே' பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நானி நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் சவுர்யவ் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'ஹாய் நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடிக்கிறார். 'ஹாய் நான்னா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற டிசம்பர் 21-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் 'நிழலியே' பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை அனுராக் குல்கர்னி மற்றும் சின்மயி ஸ்ரீபாதா இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் செய்திகள்