பிலிம்பேர் விருதுகள் 2024 விழாவில் நானி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
|69வது பிலிம்பேர் விழாவில் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசாரா' திரைப்படம் 6 விருதுகளை வென்றது.
சென்னை,
69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் உள்ள சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில், நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசாரா திரைப்படம் 6 விருதுகளை வென்றது. சிறந்த முன்னணி நடிகர் விருதை இந்த படத்திற்காக நானி பெற்றார். அப்போது பேசிய நானி சுவாரஸ்ய தகவல் ஒன்றை கூறினார்.
அவர் கூறுகையில்,
'வெளிப்படையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன், இப்போதெல்லாம் விருது வழங்கும் விழாக்களில் கலந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு குறைந்துவிட்டது. நான் வருவதற்கு ஒரே காரணம் என் குழுவின் கடின உழைப்புக்காக அவர்கள் விருதுகள் வெல்வதை பார்ப்பதற்காகதான்,' என்றார்
*சிறந்த முன்னணி நடிகர் - நானி (தசரா)
*சிறந்த முன்னணி நடிகை - கீர்த்தி சுரேஷ் (தசரா)
*சிறந்த அறிமுக இயக்குனர் - ஸ்ரீகாந்த் ஒடேலா (தசரா)
மேலும், இப்படத்திற்காக கோலா அவினாஷ், சத்யன் சூரியன் மற்றும் பிரேம் ரக்ஷித் ஆகியோரும் விருது பெற்றனர்.