< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

நானியின் 'கோர்ட்' படத்தின் பூஜை

தினத்தந்தி
|
31 Aug 2024 9:48 PM IST

நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷ் கூட்டணியில் ‘கோர்ட்’ படத்தின் துவக்க விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது.

'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.24.11 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

'கோர்ட்' படத்தின் துவக்க விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

துவக்க விழா புகைப்படங்களை வால் போஸ்டர் சினிமா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. படங்களில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் நானி இடம்பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்