< Back
சினிமா செய்திகள்
Nandhan directors post goes viral on Sasikumars birthday
சினிமா செய்திகள்

'என்னை மன்னித்துவிடுங்கள்' - சசிகுமார் பிறந்தநாளில் 'நந்தன்' பட இயக்குனரின் பதிவு வைரல்

தினத்தந்தி
|
28 Sept 2024 11:44 AM IST

சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'நந்தன்' பட இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

'சுப்ரமணியபுரம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. அதன் பின்னர், இயக்கத்தை கைவிட்டு நடிப்பில் முழு கவனத்தை செலுத்திய சசிகுமார் 'நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதனைத்தொடர்ந்து, இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'உடன்பிறப்பே,' 'அயோத்தி மற்றும் கருடன்' படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த, 'நந்தன்' திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு கடந்த 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை 'உடன்பிறப்பே' படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார்.

சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இன்று நடிகர் சசிகுமார் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'நந்தன்' பட இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நந்தன் படப்பிடிப்பில் சசிகுமார் பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும், அதற்காக தன்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்