கணவரை பிரிவதாக பரவிய வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த நமீதா
|நமீதாவும் அவரது கணவரும் பிரிய இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
சென்னை,
தமிழ் திரையுலகில் 2000-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நமீதா கவர்ச்சியான நடிப்பால் அதிக ரசிகர்களை சேர்த்தார். விஜயகாந்த், விஜய், அஜித்குமார், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தார்.
2017-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததால் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தினார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார்.
சமீபத்தில், நமீதாவும் அவரது கணவரும் பிரிய இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. தற்போது அந்த வதந்திகளுக்கு நமீதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
நானும் என் கணவரும் பிரிய இருப்பதாக வதந்தி பரவி இருப்பது எனக்கு சில தினங்களுக்கு முன்புதான் தெரியும். இதனைப்பார்த்து நானும் என் கணவரும் சிரித்தோம். உடனே என் கணவரும் நானும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டேன். ஆனாலும் வதந்திகள் நிற்பதுபோல் தெரியவில்லை. பல வதந்திகளை ஏற்கனவே சினிமாவில் பார்த்ததால் இதனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.