< Back
சினிமா செய்திகள்
நகுல் நடிக்கும் புதிய படம் நிற்க அதற்கு தக - போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

நகுல் நடிக்கும் புதிய படம் 'நிற்க அதற்கு தக' - போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
8 Jun 2023 6:05 AM IST

கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள ‘நிற்க அதற்கு தக’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டி3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'நிற்க அதற்கு தக' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. வயலினில் ரத்தம் வடிவது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்