< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இணைந்த நகுல்..!
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் இணைந்த நகுல்..!

தினத்தந்தி
|
9 July 2022 6:12 AM IST

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தில் நகுல் இணைந்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் கன்னட நடிகர் பிருத்வி ஆம்பர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் ரமணா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான நகுல் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் பிருத்வி ஆம்பருக்கு, நகுல் டப்பிங் பேசியுள்ளார். நகுல் 'பாய்ஸ்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்