< Back
சினிமா செய்திகள்
எம்.பி. தேர்தலில் போட்டியா? நடிகர் நாகார்ஜுனா விளக்கம்
சினிமா செய்திகள்

எம்.பி. தேர்தலில் போட்டியா? நடிகர் நாகார்ஜுனா விளக்கம்

தினத்தந்தி
|
3 Oct 2022 12:28 PM IST

நாகார்ஜுனா அரசியலுக்கு வர முடிவு செய்து இருப்பதாகவும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதற்கு நாகார்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கிறார். அரசு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இதையடுத்து நாகார்ஜுனா அரசியலுக்கு வர முடிவு செய்து இருப்பதாகவும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதற்கு நாகார்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, ''நான் அரசியலில் குதித்து விஜயவாடா தொகுதியில் எம்.பி பதவிக்கு போட்டியிடப்போகிறேன் என்று தகவல்கள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. இப்போதைக்கு நான் அரசியலை விட்டு விலகி இருக்கிறேன். எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை. நல்ல கதை கிடைத்தால் அரசியல் தலைவர் கதாபாத்திரத்தில் நடிப்பேனே தவிர அரசியலுக்கு வரும் ஆர்வம் இல்லை. தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு முறையும் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற பிரச்சாரம் நடப்பது வழக்கமாகி விட்டது. இப்போது கூட அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது'' என்றார். நாகார்ஜுனா தற்போது கோஸ்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்