நாகார்ஜுனாவுக்கு ரூ.3,000 கோடி சொத்து
|அதிக சொத்து சேர்த்துள்ள தென்னிந்திய நடிகர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
நாகார்ஜுனா ஒரு படத்துக்கு ரூ.20 கோடிவரை சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க ரூ.2 கோடி பெறுகிறார். ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகர்கள் மத்தியில் இவருக்கு எப்படி 3 ஆயிரம் கோடி சொத்து என்ற கேள்வி எழலாம். நாகார்ஜுனாவுக்கு சினிமாவை தாண்டி தொழில்கள் மூலம் அதிக வருமானம் வருகிறதாம்.
இவருக்கு ஐதராபாத்தில் சொந்தமாக அன்னபூர்ணா சினிமா ஸ்டுடியோ உள்ளது. இங்கு படப்பிடிப்புகள் நடத்த கோடிகோடியாய் கட்டணம் வாங்குகிறார். இதுதவிர பள்ளிகள், கன்வென்ஷன் சென்டர் என்று நிறைய தொழில்கள் உள்ளன. இதன் மூலம் வெற்றிகரமான தொழில் அதிபராக வலம் வருகிறார்.
இவருக்கு அடுத்தபடியாக ரூ.2 ஆயிரத்து 200 கோடி சொத்துகளுடன் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் 2-வது இடத்திலும், சிரஞ்சீவி ரூ.1,650 கோடி சொத்துடன் 3-ம் இடத்திலும், அவரது மகன் ராம்சரண் ரூ.1,370 கோடி சொத்துடன் 4-ம் இடத்திலும், ஜூனியர் என்.டி.ஆர் ரூ.450 கோடி சொத்துடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடங்களில்தான் தமிழ், மலையாள நடிகர்கள் இருக்கிறார்கள்.